கிராமப்புறங்களில் எப்பாடு பட்டாவது பிள்ளைகளை கற்பிக்க வேண்டும்- அமைச்சர் துரைராஜசிங்கம்




த.நவோஜ்-

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுக்கு மற்றும் ஈரளக்குளம் பிரதேசங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விஜயம் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி பிரதேங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கலந்துரையாடப்பட்டதுடன், முக்கிய விடயங்களான விவசாய காணிகள் இன்மை, விவசாய கிணறுகள் அமைத்தல், யானை வேலிகள் சம்மந்தமான விடயங்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு வீடுகள் வழங்கப்படாமை, குளங்கள் புனரமைத்தல், கால்வாய்கள் திருத்துதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இங்கு அமைச்சர் உரையாற்றும் போது!

எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது கரிசனையுடன் இருக்கின்றது. தற்போது எமது சமுகத்திற்கு தேவையான ஒரு விடயமாக கல்வி இருக்கின்றது. இதனை எமது சிறுவர்களுக்கு பெற்றோர்கள் தான் அதிக அக்கறை எடுத்து வழங்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் கல்வி சமுகத்துடன் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

எப்பாடுபட்டாவது பிள்ளைகளை கற்பிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான கிராம புறங்களில் தான் மாணவர்களின் கல்வித் திறன் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் அவர்களுக்கான ஊக்குவிப்பு குறைவாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலைகள் மாற வேண்டும் நாமும் அதற்கு உறுதுணையாக இருப்போம். மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முனைவேன் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -