பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஜம்இய்யதுஸ் ஷபாப் மற்றும் சர்வதேச அல் பஷர் பௌண்டேஷனும் இணைந்து நடாத்தும் கண்ணில் வெள்ளை படர்படருவதை அகற்றும் இலவச கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வு 01-04-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சவூதி அரேபிய நாட்டின் தொழிலதிபர் அஷ்ஷெய்க் காலித் பின் நாஸிர் அஸ்ஸித்ரி, ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஜம்மான் அஸ்ஸஹ்றானி, ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஸீத், ஷபாப் நிறுவனத்தின் கண் சிகிச்சை முகாமின் பொறுப்பாளர் ஏ.ஜெ.வாரிஸ், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஜாபிர் உட்பட வைத்தியர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல வைத்தியர் டாக்டர் பஹுருத்தினால் பரிசோதிக்கப்பட்ட கண்ணில் வெள்ளைபடர் உள்ள கண் நோயாளிகள் கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்டனர்.
4 தினங்கள் இடம்பெறவுள்ள இவ் இலவச கண் சிகிச்சை முகாமில் கண்ணில் வெள்ளைபடர் உள்ள 500 கண் நோயாளிகளுக்கு கண் சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ளதாக ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் கண் சிகிச்சை முகாமின் பொறுப்பாளர் ஏ.ஜெ.வாரிஸ் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)