சிரியாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: கேமராவை பார்த்து பயத்துடன் சரண்டராகும் சிறுமி!

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுவன் தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில், மீண்டும் அது போன்ற மற்றொரு புகைப்படம் வெளியாகிள்ளது. 

இம்முறை பெண் குழந்தை ஒன்று போட்டோ எடுப்பதை துப்பாக்கியாக நினைத்து சரண்டர் ஆக அழுதவாறு கைகளை மேலே தூக்கும் புகைப்படத்தை செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. இது போன்ற நிகிழ்வுகள், அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. 

சிரியாவில் உள்ள ஜோர்டான் அகதி முகாமில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கு சேவை செய்து வந்தார். அவர் அங்குள்ள பெண் குழந்தையை படம் பிடிப்பதற்காக தனது கேமராவை எடுத்த போது அதை துப்பாக்கி என நினைத்த அக்குழந்தை தனது கைகளை அலேக்காக தூக்கி சரண் அடையும் எண்ணத்துடன் அழுகையை கூட்டியது. மீண்டும் இக்காட்சிகளை காணும்போது நமது நெஞ்சங்களை இப்புகைப்படம் ரணத்தில் ஆழ்த்துகிறது. 

கடந்த 4 வருடங்களாக சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 17000 பேரில் அக்குழந்தையின் குடும்பமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -