ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தம்பலகாமம் சிராஜ் நகர் சுகாதார தாய்,சேய் பராமரிப்பு நிலையத்தினை இன்று 04 போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்.
அதேவேளை, பிரதி அமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் அங்கு கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சரின் சிராஜ்நகர் இணைப்பாளர் என்.எம்.சபியுள்ளாவின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சரும் பிரதேச மக்களின் சுகாதார பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
அதேவேளை, பொதுமக்களின் பிரதான தேவையான சுகாதார பிரச்சினைகளை அமைச்சர்களிடம் முன்வைத்தற்கினங்க சுகாதார தாய்,சேய் பராமரிப்பு நிலையத்தினை மத்திய மருந்தகமாக தரமுயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்றினை உருவாக்கித்தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் பிரதி அமைச்சரின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.யூசுப்,அல்ஹிஜ்ரா ஜூனியர் பாடசாலையின் அதிபர் அப்துல் றவூப் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)