அபு அலா –
பொத்துவில் 20, தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் அமைக்கப்பட்ட ஹிதாயபுரம் பொது நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (03) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.முபாறக், எம்.எஸ்.முபாறக், எம்.எச்.ஏ.றகீம், எம்.துரைரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹிதாயாபுரம் பொதுமக்கள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே தவிசாளர் மேற்கொண்ட முயற்சின் பயனாக சுமார் 15 இலட்சம் ரூபா பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஹிதாயபுரம் பொது நூலகம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)