15 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை முன்வைத்து றியாஸினால் அடையாள உண்ணா விரதம்!

யு. எல்.எம். றியாஸ்-
ரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் தேவைகளையும் உள்ளடக்க வேண்டும் எனக் கோரி 15 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை முன்வைத்து கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத் திட்டதிற்கருகாமையில் ' ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் ' எனும் தொனிப்பொருளில் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணா விரதம் இன்று (04.04.2015) இடம்பெற்றது.

இதன் போது இவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்;

01.தற்போதை அரசு வாக்குறுதியளித்த கல்முனை புதிய நகர திட்டம் உடன்
ஆரம்பிக்கப்பட வேண்டும்.

02.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி இருக்கும் கல்முனைக்குடி பிரதேசத்திற்கென தனியான குடிநீர்த்தாங்கி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக குடிநீர் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும்.

03.சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசினால்
நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத்திட்டம் பயனாளிகளிடம் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும்.

04.ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் தமது காணிகளை இழந்த, தொழில்களை இழந்த மற்றும் பல்வேறு வகையில் பாதிப்புற்ற ஒலுவில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஏற்ற வகையில் உடனடியாக நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

05.கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புற்று தற்போது மீள்குடியேறி குடியிருப்புத்திட்டங்களில் வாழும் மக்களுக்கு எதுவித நிபந்தனைகளும் இன்றி அவர்களின் வீடுகளுக்கான உரிமை (உறுதிகள்) வழங்கப்படவேண்டும்.

06.சுனாமியால் தங்களது குடியிருப்பு நிலங்களை இழந்த கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்ட மக்களுக்கு 10 பேச்சர்ஸ் நிலம் அவர்களது குடியிருப்பினை அண்டிய பிரதேசத்தில் வழங்கப்பட வேண்டும்.

07.சுனாமியால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறி வாழும் இடங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் நிலையங்களை ஏற்படுத்தி இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்த வேண்டும்.

08.கல்முனை மாநகர பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காணி
உறுதிகள் வழங்கப்படாத கடைகளுக்கு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

09.சுனாமியால் முழுமையாக சேதமடைந்த கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை போதிய அடிப்படை வசதிகள் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

10.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் இயங்கி,
சுனாமி தாக்கத்தினால் சேதமான ஆயூர்வேத வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்டதாக கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தினை அண்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

11.கல்முனை பொது மைதானம், பிஸ்கால் நிலம் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணிகள் அதன் உறுதிகளில் குறிப்பிட்ட வகையில் சட்டப்படி மீட்டெடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

12.சாய்ந்தமருது மீன்பிடி படகு இறங்கு துறை அபிவிருத்தி செய்யப்பட
வேண்டும் அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விசாரிக்க
குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

13.போதிய இடவசதியும் அடிப்படை வசதிகளும் இன்றி இருக்கும் கல்முனை
பொதுச்சந்தை நவீனமயப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் நடைபாதை
வியாபாரிகளுக்கென தனியாகவும் சொந்தமாகவும் இட ஒதுக்கீடு செய்யும்
பொருட்டு கல்முனை பொதுச்சந்தை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

14.கல்முனைக்குடி சாஹிபு வீதி மற்றும் அலியார் வீதிகளின் புனரமைப்புப்
பணிகள் ஏன் இடைநடுவில் கைவிடப்பட்டது என்பது தொடர்பில் என்னால் கடந்த 25.02.2015ல் இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் என்னால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு மீண்டும் இவ்வீதிகள் உட்பட அனைத்து வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும்.

15.கல்முனை நகர அபிவிருத்திக்கென அரசு உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

எனது கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த தவறும் பட்சத்தில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்ஸா அல்லாஹ் எனது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -