அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை ஆசிரியர்களின் நடவடிக்கை!

அபூ அலா –
ட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 2013 / 2014 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.பாஹிம் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையால் நிகழ்வுக்கு சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களும், கற்பித்துக்கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை எதிர்வரும் 8 ஆம் திகதி புதன் கிழைமை நடாத்த ஆசிரிய குழாமினர் திட்டமிட்டுள்ளோம் அதற்கு உங்களின் பங்களிப்புக்களை தரவேண்டும் என்று பிரதி அதிபர் எம்.ஐ.எம்.பாஹிம் தெரிவித்தார்.

அதற்கு பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை ஆசிரியர் குழாமினர் குறித்த திகதியை முன்கூட்டியே தீர்மாணித்து விட்டு ஒரு சடங்குக்காக எங்களை கூட்டி இக்கலந்துரையாடலை நடாத்துகின்றீர்கள். இது எங்களால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும்.

இந்த பாராட்டு நிகழ்வு என்பது பெற்றோர்களின் முழு ஆதரவுகளையும் பெற்று அவர்களின் விருப்பத்துக்கேற்ப செய்ய வேண்டிய நிகழ்வாகும். இது அவ்வாறில்லாமல் ஆசிரியர்களின் வாசிக்காகவும், அவர்கள் விரும்பும் தினத்தில் நடாத்தும் நிகழ்வு அல்ல இந்த நிகழ்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.

இன்னுமோர் சாரார் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் அரச தொழில் செய்கின்றவர்கள், அதுவும் தூர இடங்களில் தொழில் செய்து வருகின்றோம். இந்நிலைமையை கவனத்தில் கொண்டாவது அதற்குரிய ஒரு லீவு தினத்தை உங்கள் ஆசிரியர் குழாமினர் தீர்மாணித்திருந்தால் அதை ஓரளவாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம். 

ஆசிரியர் குழாத்தினரால் எடுக்கப்பட்ட இத்திகதியை மாற்றியமைக்க வேண்டும். இல்லை என்றால் இந்நிகழ்வுக்கு நாங்களோ எங்களது பிள்ளைகளோ வரப்போவதில்லை என்று பெற்றோர்களினால் ஒருமித்த கருத்து முன்வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொள்ளாத பிரதி அதிபர் கலந்துரையாடல் நிகழ்வின் இடைநடுவில் புரக்கணிப்பு செய்துவிட்டு வெளியேறிச்சென்றார்.

எது எவ்வாறாயினும், மாணவர்களை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு என்பது அது பெற்றோர்களின் முழு ஆதரவு பங்குபற்றுதலுடன் செய்ய வேண்டிய நிகழ்வாகும். இது அவ்வாறில்லாமல் ஆசிரியர்களின் சுய நலனுக்காக நடாத்தும் நிகழ்வல்ல என்பதை பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர் கொண்ட ஆசிரியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -