கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கல்!

பி. முஹாஜிரீன்-
திர்காலத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டமானது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் அங்குரார்ப்ண நிகழ்வு (22) புதன்கிழமை நடைபெற்றது.

சின்னப்பாலமுனை சுகாதார நிலையத்தில் சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்; 

ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். இங்கு வழங்கப்பட்டுள்ள போசாக்கு உணவுகளை வீண்விரயம் செய்யாமல் உபயோகப்படுத்தப்படல் வேண்டும். இதன் மூலம் அரசின் இலக்கை அடைவதற்கும் நாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த 181 கர்ப்பிணி பாலுட்டும் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெருமதியான போசாக்கு உணவுப் பொதிகள் முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முட்டை, நெத்தலி கருவாடு, அரிசி, பயறு, சோயா, கடலை, கச்சான் போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -