பி.எம்.எம்.ஏ.காதர்-
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சைப் பெறுபெறுகளின் படி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபெறுகளைப் பெற்றள்ளனர்.மாணவிகளான முஸம்மில் பாத்திமா ஸஹ்றா, ஆதம்லெப்பை பாத்திமா லுப்னா ஆகியோர் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பாடசாலையில் 76 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 74 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கற்க தகுதி பெற்றள்ளனர். சித்தி வீதம் 97.37 ஆகும்.மேலும் இரண்டு மாணவர்கள் 8 ஏ,1பி சித்தகளையும்;,பல மாணவர்கள் 7ஏ, 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
கணித விஞ்ஞானப் பிரிவில் கற்பதற்கு 60பது மாணவர்களும்,வர்த்தகப் பிரிவில் கற்பதற்கு ஏழு மாணவர்களும்,கலைப் பிரிவில் கற்பதற்கு ஏழு மாணவர்களும் தகுதிபெற்றள்ளனர். சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தள்ளார்.
