பொது இடங்களில் திறந்து வைக்கப்பட்ட இலவச வைபை (WiFi) வலயங்கள் ஊடாக 5 நாட்களில் 1693 பேர் அச்சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட 26 வைபை (WiFi) வலயங்களில் கொழும்பு வலயத்தில் அதிகமானோர் சேவைகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் 41,701 மெகா பைட் இணையத்தை பயன்படுத்தியுள்ளனர். யாழ். பொதுநூலகத்திலும் இலவச வைபை (WiFi) வசதியை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 26 இடங்களில் உள்ள இலவச வைபை (WiFi) சேவை எதிர்வரும் காலங்களில் ஆயிரம் இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
