இக்பால் அலி-
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் கிழக்கு மாகாணத்தில் கடைசியாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 2500 வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உலருணவு வழங்கி வைக்கின்ற நிகழ்வு நேற்று முதல் 31-03-2015 பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். ஜே இம்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சவூதி அரேபிய்யா நாட்டைச் சேர்ந்த சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகளான கலாநிதி அஷ்ஷெய்க் முஹமட் பா ஜுனைட் மற்றும் அஹமட் அல் குகைலி ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
4500 ருபா பெறுமதியான இந்த உலருணவுப் பொதிகள் பொலன்நறுவை மாவட்டத்திலுள்ள சுங்காவில் பிரதேசத்திற்கு 250 பொதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி பிரதேசத்திற்கு 500 பொதிகளும், அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு 500 பொதிகளும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய இரு பிரதேசங்களுக்கு 500 விகிதம் 1000 பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் வட மாகாணத்தில் பாவற்குளம் பிரதேசத்தில் 250 பொதிகளும் வழங்கி வைக்கப்பட்ன. இந்த இஸ்லாமிய நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இந்த நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)