முஹம்மட் நபாருடீன் -
அட்டாளைச்சேனை-ஆலங்குளம் பாவங்காய் வீதிக்கு முன்னாள் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹீம் டாக்டர் ஜலால்தீனுடைய ஞாபகார்த்தமாக டாக்டர் ஜலால்தீன் பெருந்தெரு என பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் தற்போதைய அட்டாளைச்சேனை ஸ்ரீ.மு.கா வின் மத்திய குழுவின் ஆலோசகர்களில் ஒருவருமான இக்பால் எம் யூசுப் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடமும் கிழக்கு மாகதண சபை உறுப்பினர் ஏ.எல்.எம.நஸீரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றார்.
1977 ம்; ஆண்டுக்குப் பின்னர் வந்த ஐ,தே.கட்சியின் பொத்துவில் தொகுதி முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவ செய்யப்பட்ட மர்ஹீம் டாக்டர் ஜலால்தீன் பாணமை பொத்துவில் அக்கரைப்பற்று பாலமுனை ஒலுவில் நிந்தவூர் மாளிகைக்காடு அட்டாளைச்சேனை போன்ற கிராமங்களுக்கு பல அபிவிருத்திகளைச் செய்திருந்தார்.
இவர் அட்டாளைச்சேனைக்குச் செய்த அபிவிருத்திகளில் அட்டாளைச்சேனை- ஆலங்குள பாவங்காய் வீதி அமைப்பை அட்டாளைச்சேனை மக்கள் ஒரு போதும் மறந்து விட முடியாது.
இவ்வீதி அமைப்பின் காரணமாகவே அட்டாளைச்சேனை மக்களின் பொருளாதாரம் விவசாயம் கல்வி போன்ற துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. இம்மகத்தான பணியைச் செய்த டாக்டர் ஜலால்தீன் ஞாபகார்த்தமாக இவ்வீதிக்கு ஜலால்தீன் பெருந்தெரு என பெயர் சூட்டுவது மிகப் பொருத்தமுடையதாகும்.
ஆகவே இப்பணியைச் செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்
