தேர்தல் முறை மாற்றம் பற்றிய 20 ஆவது யாப்புத் திருத்தம்-ஆலோசனைகள் முன்வைப்பு!

எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-
தேர்தல் முறை மாற்றம் பற்றிய 20 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முடிவு செய்யப்பட்டு ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை காலை நடை பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது கையளிக்கப்பட்ட இந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் வருமாறு:

1.பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்தத் தொகை 225 இல் இருந்து 260 ஆக அதிகரிக்கப்படும்.

2.இதில் 231 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் அதே வேளை, 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுவர்.

3.தேர்தல் முறையானது, தொகுதிவாரி (First Past the Post - FPP) மற்றும் விகிதாசார (Proportional Representation- PR) முறைகளை கொண்ட கலப்பு முறையாக அமையும்.

4.தெரிவு செய்யப்படும் 231 உறுப்பினர்களில் 165 உறுப்பினர்கள் FPP முறைஊடாகவும், 66 உறுப்பினர்கள் மாவட்ட PR மூலமும் தெரிவு செய்ப்படுவார்கள்.

5.இந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும்

6.தீவிர அரசியலில் ஈடுபடாத ஐந்து பேரைக் கொண்ட குழுவாக இது அமையும்.

7.ஒவ்வொரு தேர்தல் மாவட்டமும் 16 தேர்தல் தொகுதிகளை விட அதிகரிக்காத தொகுதிகளைக் கொண்டதாக பிரிக்கப்படும்.

8.எல்லை நிர்ணயத்தின்போது ஒவ்வொரு பிரதேசத்தினதும் இன ரீதியான விகிதாசாரம், அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் என்பன கவனத்திற்கொள்ளப்படும்.

9.தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யும்போது அவசியம் ஏற்படின் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளிலும் குறைந்த பட்ச மாற்றங்களைச் செய்வதற்குரிய அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்படும்.

10.தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தின்போது அவசியத்திற்கேற்ப ஒன்றுக்கு
மேற்பட்டஉறுப்பினர்களை தெரிவு செய்யும் தொகுதிகளும் உருவாக்கப்படும்.
(multi member polling divisions )

11. PR முறையில் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது ஒவ்வொரு
தேர்தல் மாவட்டத்திலும் கட்சிகள் பெற்றுக் கொண்ட மிகுதி வாக்குகளின்
அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்படும்.

12.ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் PR முறையில் தெரிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.

13.ஒரு உறுப்பினரை மாத்திரம் கொண்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருவர், சம அளவிலான வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பத்தில் குலுக்கல் முறை மூலம் தெரிவத்தாட்சி அலுவலரினால் உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர்.

14.மாவட்ட PR முறையில் ஏதாவதொரு கட்சி உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனில், மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 வீதத்திற்கும் குறையாத வாக்குகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -