ஸ்ருதிக்கு வந்த சிக்கள்!

புதிய படத்தில் நடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என ஐதராபாத் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ‘மல்டி ஸ்டார்’ என்ற படத்தில் நாகார்ஜூன்–கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

படப்பிடிப்புக்கு திததிகளை ஒதுக்கித் தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் படநிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பிக்சர் ஹவுஸ்’ நிறுவனத்தின் படப்பிடிப்பு முடியும் வரை புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் (17) விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் தரப்பு வழக்கறிஞர் பி.சந்திரசேகரன் ரெட்டி தனது வாதத்தை எடுத்து கூறினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -