1) 19வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான எவ்வித அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை. குறைந்த பட்சம் 13வது திருத்தச் சட்டத்தில் ஏற்கனவே இனம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான முன்மொழிவுகள் இடம்பெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
மாகாண சபை சட்டத்திலுள்ள சில பிரிவுகளை நீக்குவதன் மூலம் 13வது திருத்தச் சட்டத்தை செழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். சுமச்சீரற்ற அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கவனத்தில் கொள்ளமுடியும்.
2) 19வது அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கான திருத்த முன்மொழிவுகள்
2.1. அரசியமைப்பு பேரவையில் குறைந்தது ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும்
2.2. ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும் தலைவர்களையும் அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும்போது 'பன்முகத்தன்மை' பேணப்படுவதற்கு பதிலாக 'இனவிகிதாசாரம்' பேணப்படல் வேண்டும்.
2.3. பத்திரிகை நிறுவனங்கள் அல்லது தொலைக்காட்சி நிறுவனங்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு ஏழு நாட்களுக்குள் தாம் எந்த வேட்பாளரை அல்லது கட்சியினை ஆதரிப்பதென்று தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்படும் ஒழுங்கு விதிகள் அவையினைக் கட்டுப்படுத்தாது என்ற பந்தி நீக்கப்படல் வேண்டும்
2.4. தேர்தல் ஆணைக்குழு அல்லது தேர்தல் ஆணையாளர் தேர்தல் சட்ட விதிகளையும், தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்படும் ஒழுங்கு முறைகளையும் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக
(1) பாராளுமன்ற தேர்தல் ஆணையாளரின் ஒழங்குவிதிகளை மீறுவோருக்கு எதிரான தண்டங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை ஆக்கவேண்டும்
(2) அரசியலமைப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மேல் நீதிமன்றங்கள் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகார வரம்பு எல்லை உடையதாக அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
2.5. ஜனாதிபதி உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது குறைந்த பட்சம் இரண்டு தமிழர்களும் இரண்டு முஸ்லீம்களும் அவ் நீதிபதிகளின் குளாமில் இருப்பதனை உறுதிசெய்தல் வேண்டும்
2.6. 19வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆணைக்குழுக்களுக்கு மேலாக இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்படல்.
இவ் ஆணைக்குழு இன மற்றும் மத நல்லிணக்கத்ததைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அதற்கு எதிராக செயற்படுவோர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தேர்தல் முறையில் திருத்தங்களுக்கான முன்மொழிவு
1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இழப்பினை ஈடு செய்தல்
கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயற்கை காரணிகளால் நிகழும் மரணங்களிலும் பார்க்க அதிக அளவிலானோர் மரணித்ததனாலும், பொருளாதாரக் காரணிகளுக்காக நடைபெறும் குடியகல்விலும் பார்க்க பாரிய அளவிலான குடியகல்வுகள் இடம் பெற்றதனாலும் இம் மாகாணங்களில் ஏற்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் புதிய தேர்தல் முறை அமைதல் வேண்டும். இந் நடைமுறை ஓர் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அமுலில் இருக்கலாம்.
2. மேலதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேர்தல் தொகுதிகளை ஒருவாக்கல்
தற்போதைய குடிப்பரம்பலைக் கவனத்தில் எடுத்து மேலதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேர்தல் தொகுதிகளை உருவாக்கல் வேண்டும்.
3. எதிர்வரும் தேர்தலுக்கு நடைமுறைப்படுத்த வேண்டிய முறைமைகள்
புதிய தேர்தல் முறைமையை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு கால அவகாசம் வேண்டுமாதலால் எதிர்வரும் தேர்தல் தற்போது நடைமுறையிலிருக்கும் விகிதாசார முறையிலேயே நடைபெறுதல் வேண்டும். வேண்டுமெனில் விருப்பு வாக்கு முறைமையிலேயே இல்லாது செய்யலாம்.(அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்துவதையும் பரிசீலனை செய்யலாம்)
4. விகிதாசார முறையில் பாராளுமன்ற பிரதிநிதகளைக் கணக்கெடுக்கும் முறைமை.
விகிதாசார முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் கட்சிகளுக்கிடையில் பகிரும்போது அந்தந்த தேர்தல் மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சிகளும் எடுத்த வாக்குகளின் விகிதாசார அடிப்படையிலேயே கணிக்கப்படல் வேண்டும்.
5. கூட்டுக் கட்சிகளின் தேசியல் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை நிர்ணயிக்கும் முறைமை.
கூட்டாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முதல் தங்கள் கூட்டில் உள்ள கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த கட்சிகள் தனித்துவமாக சில தேர்தல் மாவட்டங்களிலும் கூட்டுக்கட்சியின் வேட்பாளராக வேறு மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட முடியும்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை நிர்ணயிப்பதற்கு ஒவ்வொரு கட்சிகளும் எடுத்த வாக்குகளைக் கணிக்கும்போது ஒவ்வொரு கூட்டுக் கட்சியும் அதனுடைய அங்கத்துவக் கட்சிகளும் பெற்ற வாக்குகளை ஒட்டுமொத்தமாக கூட்டுக் கட்சிகளுக்கான வாக்குகளாக கணிக்கப்படும் வகையில் தேர்தல் சட்டம் மாற்றியமைக்கப்படல் வேண்டும்.