இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே கடந்தகால யுத்த சூழலிலே அன்னளவாக 85000 பெண்கள் தங்கள் கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டுள்ளனர்என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகம் நடாத்திய சர்வதேசமகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது, அதில், பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்த காலத்தில் விதவைகளாக்கப்பட்டவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலயே இருக்கின்றனர்.அதிலும் இளம் வயதில் விதவைகளாக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம்வறுமையில் 19.4 வீதத்தினால் காணப்படுகின்ற போது, இளம் விதவைகள் தங்களது வாழ்வாதாரத்திற்காககடுமையாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.
கணவனை இழந்து, தனது வறுமை காரணமாக இளம் பெண்கள் கீழத்தேய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அவ்வாறு தனது குடும் கஸ்டத்தின் காரணமாக செல்லும் பெண்களில் பலபெண்கள் அங்கு பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.
சிலர் துண்புறுத்தப்படுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்ற பல பெண்கள்சவப்பெட்டிகளில் வந்த வரலாறு நமது சமுகத்தில் அதிகம் காணப்படுகின்றது. கடந்த 2006ம் ஆண்டுபிற்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது இடங்களுக்குகுடியேற்றப்பட்டார்கள். ஆனால், அந்தக் குடியேற்றத்தின் பின்னர் 100க்கும் மேற்பட்டடோர் காணாமல்போயுள்ளார்கள். கடத்தப்பட்டுமுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களில் அதிகமானோர் இளம் குடும்பத்தலைவர்கள் என்றபடியால், அக்குடும்பத்தலைவிகள்வாழ்வாதார இரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்குடும்பத் தலைவர்களைக் கடத்தியவர்கள் இன்றுசௌகரியமாக வாழ்ந்து வருகின்றனர். காணாமல் போனவர்களது உறவுகள் என்னிடம் சொன்னார்கள்.
எங்களது கணவனை, எங்களது உறவுகளைக் கடத்தியவர்களை எங்களுக்குத் தெரியும். அவர்களைக் காட்டிக்கொடுத்து, தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு எங்களுக்கு களமமைத்துத் தாருங்கள் என்று. அவர்களதுகோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும்குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், அதிதிகளாககிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதிரீ.தினேஸ் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு சாரிகள் அன்பளிப்பாகவழங்கப்பட்டதுடன், இளைஞர் கழக உறுப்பினர்களால் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)