எம்.வை.அமீர் -
பிறக்கவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2015-03-30ல் மாணவர்களால் புத்தாண்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் அவர்கள் கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
விசேட அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் பிரிவின் தலைவர் எம்.ஏ.எம்.சமீம் அவர்கள் கலந்து கொண்ட அதேவேளை பிரயோக விஞ்ஞான பீட திணைக்களங்களின் தலைவர்களான ஏ.நஸீர் அகமட் அவர்களும் கலாநிதி யு.எல்.செயினுடீன் அவர்களும் ஏனைய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் ஊழியர்களும் பெரும் திரளான சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டை சித்தரிக்கும் வகையில் மாணவர்களால் கலாச்சாரத்தை சித்தரித்தும் கூடாரங்கள் விளையாட்டு இடங்கள் என பல்வேறு அலங்கார அமைப்புகள் செய்யப்பட்டு மாணவர்களால் கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)