சம்மாந்துறை மகளிர் சங்கம், எதிர்கால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல்!

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேசத்தின் விளினியடி அன்னாஸ் சமூக சேவை மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த சம்மாந்துறையின் எதிர்கால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல் அமைப்பின் தலைவி பி.ரீ.ஹினாயா தலைமையில் அமைப்பின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாது சம்மாந்துறை மக்கள் அனுபவிக்கின்ற கஸ்டத்தினை எதிர்வரும் தேர்தலில் சம்மாந்துறையிலுள்ள மகளிர் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமது பிரதேச பிரதிநிதியை பெற்றுக்கொள்வதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

ஆனால் இம்முறை சம்மாந்துறையில் சமுகத்தின் சிந்தனையுள்ள மக்களுக்காக சேவை செய்யக் கூடிய திறமை மிக்க சிறந்த வேட்பாளரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சம்மாந்துறை பிரதேசத்தில் வேட்பாளராக நிறுத்த வேண்டும். 

தற்போதைய நிலையில் சிறந்த தகுதியும், சமுக சிந்தனையுள்ள, மக்களுக்காக சேவை செய்யக் கூடிய ஒருவராக எங்களால் இணங்காணப்பட்ட பிரதிநிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் காணப்படுகன்றார். அவரை வேட்பாளராக நிறுத்திமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் நாங்கள் கோரிக்கையும் முன்வத்துள்ளோம் என இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவல இணைப்பாளர் எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி, ஆசிரியர் எம்.ஐ.மஜீட், கட்சி முக்கியஸ்தர்கள், அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -