த.நவோஜ்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவு ஓய்வூதியர்களின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தலைவர் கு.சிங்காரவேல் தலைமையில் நடை பெற்றது.
இதன் போது பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுல நாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓய்வூதிய மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் தாழை செல்வநாயகம் மற்றும் ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகளாக தலைவர் கு.சிங்காரவேல், செயலாளர் க.கந்தலிங்கம், பொருளாளர் செ.செல்வநாயகி, உப தலைவர் த.அருளானந்தம், உப செயலாளர் ந.கணேசலிங்கம், நிர்வாக உறுப்பினர்களாக க.சோமசுந்தரம், பே.புலேந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)