ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்சித் தலைவர்களுக்கான விஷேட சந்திப் பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற் போது குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
விஷேடமாக புதிய அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்திலுள்ள சகல கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை இன்று விஷேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றும் இடம் பெறவுள்ளது.
பிற்பகல் 02.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
