எம்.எம்.ஏ.ஸமட்-
30 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாது குன்றும் குழியுமாகக் காணப்படும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி குறுக்கு வீதியை அபிவிருத்தி செய்வதற்கான அவசர திட்ட முன்மொழிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் அபிவிருத்தி செய்யப்படாது காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் தோரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதியின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன் தொடரில் அம்பாறை மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (23.03.2015) கல்முனையிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் அமைச்சர் ஆரியபதி கலபதியின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், கல்முனைப் பிரதேசத்தில்;பல தசாப்தங்கள் கடந்தும் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாது உள்ளதாகவும இதனால் மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இவ்வீதிகளை அபிவிருத்தி செய்வதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி குறுக்கு வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கி அதற்கான திட்ட முன்மொழிவையும் அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)