அக்கரைப்பற்றில் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டவரின் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல்!

சப்றின்-
தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்பட்ட அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரை அவரின் வீட்டிற்கு சென்று குற்ற முறையாக ஏசி அச்சுறுத்திய அக்கரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட17 பேருக்கு தலா ஒரு இலச்சம் ரூபா சரீரப்பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் கடந்த வியாழக்கிழமை விடுவித்ததுடன் எதிர்வரும் ஏப்பில் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பை சேர்ந்த சுபைர் லாபீர் என்பவர் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி அவரது வீட்டிற்கு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 17 பேர் சென்று அவரை குற்ற முறையில் ஏசி அச்சுறுத்தியதாக லாபீர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக 17 பேரையும் பொலிசார் கைது செய்து கடந்த வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இவர்களை தலா ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் ஏப்ரலில் 29ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -