ஏஎம் றிகாஸ்-
லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளை மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சி.மஹலேகம் தெரிவித்தார்.
கித்துள் பிரதேச வனப்பகுதியில் வெட்டப்பட்டு மர ஆலையொன்றிற்கு எடுத்துச்செல்லப்பட்டவேளை வீதியில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இம்மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மரக்குற்றிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்கு வன வள பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரடியனாறு பொலிஸார் மேலும் கூறினர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)