எம்.வை.அமீர், எம்.ஐ.றியாஸ்-
பொத்துவில் இறத்தல் பள்ளியடிவட்டை பகுதியில் மகாபோக நெற்செய்கை அறுவடை விழா கடந்த சனிக்கிழமை (28) பள்ளியடிவட்டை கமக்கார அமைப்புத் தலைவர் கே.எம்.காசீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் ஆரம்ப வைபவத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
1981ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் சுமார் 185 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை பண்ணப்பட்டு வந்தது.கடந்த மகாபோகத்திற்காக இப்பிரதேச விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற் கொள்ள வந்த போது இலங்கை வனத்திணைக்களம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என தடை செய்தது. இதனை இப்பிரதேச விவசாயிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இவரது நடவடிக்கையின் காரணமாக நெற்செய்கை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.இப்பிரதேசத்தில் சுமார் 150 ஏக்கர் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு மழைநீர் இல்லாமல் நெற் பயிர்கள் சுமார் 30 ஏக்கர் வரை அழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மிகுதியாக தப்பியது 80 ஏக்கராகும்.
பள்ளியடி வட்டைப்பகுதி லகுகல பிரதேச செயகலப்பிரிவுக்குற்பட்டதாகும்.
இதன் போது மாகாண சபை உறுப்பினர் தவத்தின் சேவையினை பாராட்டி இப்பிரதேச மக்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.ஐ.றியாஸ், எம்.றிஸ்வி,கிராம உத்தியோகத்தர் குலே நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)