ஓய்வு பெறும் அதிபரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வும்!

எம்.ஹிம்றாஸ்-
ட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை கல்வி நிருவாக சேவை தரத்தைக் கொண்ட வீ.ரி.எம்.ஹனீபா மௌலவியின் சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் புதிய அதிபர் ஏ.எல்.அன்வரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (29) பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 

அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலத்தின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவர் ஏ.சி.சைபுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், நீதிபதிகளான அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லா, எம்.எஸ்.சம்சுதீன், சிரேஸ்ட சட்டத்தரணிகளான அப்துல் கபுர், எஸ்.எம்.ஏ.கபுர்,எஸ்.எல்.ரசீட், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யு.எம்.வாஹித் மற்றும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,இலக்கியவாதிகள், ஆசிரியர்கள்,பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் வீ.ரி.எம்.ஹனீபா மௌலவிக்கும், புதிய அதிபர் ஏ.எல்.அன்வருக்கும் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இங்கு அதிதிகள் பலரும் உரையாற்றினர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -