சிகரட் புகைப்பதை விட்டுவிடுவதால் உங்கள் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா ? அப்படி தெரிந்திருந்தால் நீங்கள் சிகரட் புகைப்பதை விட்டிருப்பீர்கள். சரி இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சிகரட் புகைப்பதை கைவிட்டு
20 நிமிடங்களில்
• இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு வீதம் வழமைக்கு திரும்புகின்றது
• உங்கள் கைகள் மாற்றுக் கால்களின் உடல் வெப்பநிலை வழமைக்கு திரும்புகின்றது
8 மணித்தியாலங்களில்
• குருதியில் காணப்படும் கார்பன் மோனாக்சைடு மட்டம் இயல்பான நிலைக்கு திரும்புகின்றது
• குருதியில் ஆக்ஸிஜன் அளவு இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது
24 மணித்தியாலங்களில்
• மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவடைகின்றது
48 மணி நேரங்களில்
• நரம்பு முனைகள் மீளவும் வளர ஆரம்பிக்கின்றது
• நுகர்வதற்கும் சுவைப்பதர்க்குமான திறன் அதிகரிக்கின்றது
2 வாரங்கள் தொடக்கி 3 மாதங்களுக்குள்
• சுழற்சி மற்றும் நுரையீரல் செயல்பாடு விருத்தியடைகின்றது
1 மாதம் தொடங்கி 9 மாதங்களுக்குள்
• இருமல், இரத்தக் குழிவு நெரிசல், சோர்வு மற்றும் மூச்சு திணறல் குறைவடைகின்றது.
• நுண்ணிழைகள்(பிசிர்) நுரையீரலில் மீண்டும் வளர ஆரம்பிக்கின்றது.
• சளியை கையாளுதல் ,நுரையீரலை துப்பரவு செய்தல் மற்றும் தொற்றுநோய் தாக்கத்தினை குறைத்தல் போன்றவேற்றிட்கான நுண்ணிழைகளின் திறன் அதிகரிக்கின்றது
1 வருடத்தில்
• அதிக ஆபத்தை ஏற்படுத்தும் இதய நோக்கான சந்தர்ப்பம் புகைப்பவரை விடவும் அரைவாசியால் குறைவடைகின்றது
5 வருடங்களில்
• நுரையீரல் புற்று நோய் இறப்பு வீதம் ஏறக்குறைய அறைவாசியால் குறைவடைகின்றது.
• வாய், தொண்டை மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புற்று நோய் ஆபத்து புகைப்பவரை விடவும் அறைவாசியால் குறைவடைகின்றது.
10 வருடங்களில்
• நுரையீரல் புற்று நோய் இறப்பு வீதம் புகைக்காத ஒருவரின் நிலையை ஒத்ததாக காணப்படுகின்றது
• வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கருப்பை வாய் மற்றும் கணையம் போன்றவற்றின் புற்று நோய் ஆபத்து குறைவடைகின்றது
15 வருடங்களில்
• இதய நோய்களுக்கான ஆபத்து மற்றும் பக்கவாதம் போன்றவற்றிற்கான சந்தர்ப்பங்கள் புகைக்காத சாதாரண ஒருவரின் நிலையை ஒத்ததாகும்
.நீங்கள் சிகரட் புகைப்பதால்
• உங்கள் பொருளாதாரம் வீனடிக்கப்படுகின்றது
• உடல் ஆரோக்கியம் தீவிரமாக பாதிப்படைகின்றது,
• தினமும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள்,
• சக மனிதர்களின் சுவாசத்திற்கு தேவையான தூய்மையான காற்றை மாசு படுத்தி அனைவரையும் நோய் தாக்கத்திற்கு உள்வாங்கி விடுகின்றீர்கள்
• உங்கள் தரத்தை நீங்களே குறைத்து சமூகத்தில் ஒரு ஊதாரியாக பொறுப்பற்றவராக குற்றவாளியாக நடமாடுவது உங்களுக்கு புரியவில்லையா?
ஒரு நுணுக்கமான திறமையான வக்கீலிடம் சென்று புகைப்பவர்களுக்கு எதிராகவும் அதனை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்தால் நீங்கள் கம்பி என்ன வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
உங்கள் பிள்ளைக்கு பாடசாலை செல்லும்போது நீங்கள் கொடுக்கும் பணம் போதாமல் இருக்கலாம். இதனால் உங்கள் குழந்தை சக மாணவர்களோடு சென்று தனக்கு தேவையான அளவு உணவை வாங்குவதற்கு முடியாத நிலை ஏற்படும்போது மற்ற மாணவர்கள் மத்தியில் கூணி குறுகி வெட்கம் அடைய வேண்டிய நிலை ஏற்படும். உங்கள் பிள்ளைக்கு தனது கல்வித்தேவைகளுக்காக நிறைய பணம் தேவைப்படும்.
உங்கள் வீட்டில் சமையலுக்கு போதுமான அளவு பணம் இல்லாமல் கூட இருக்கலாம். உங்கள் குடும்பத்தின்,உங்கள் பிள்ளைகளின்,உங்கள் சமூகத்தின் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும். உலகில் வறுமை, பசி, பட்டினி போன்ற கொடுமைகளால் துன்பப்படும் மக்களைப்பற்றி சிந்தித்து பாருங்கள்.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அவ்வாறான கஷ்டங்கள் வரும்போது உங்கள் மனோநிலை எவ்வாறு இருக்கும்.
பக்கீர் எம் இஸ்ஹாக் BA
மருதமுனை
