ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் ECGO கிண்ண இறுதிப்போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

ட்டமாவடி மத்திய கல்லூரியில் கணித,விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளை மேம்படுத்தும் அமைப்பாக செயற்பட்டுவரும் கல்வி, வழிகாட்டும் அமைப்பானது Education and Career Guidance Organaization (ECGO) மாணவர்களை சகதுறைகளிலும் பயிற்றுவித்து சமூகத்தில் சிறந்த தலைவர்களாக செயற்பட வைக்கும் தூரநோக்கு திட்டத்தின் அடிப்படையில் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்களிடையே விளையாட்டுத்துரையின் மூலமும் ஒழுக்கமுள்ள சிறந்த தலைவர்களை உறுவாக்குதல் என்ற பிரிவின் கீழ் வருடாவருடம் நடாத்தப்பட்டு வரும் ECGO கிண்ண கிறிக்கட் சுற்றுப்போட்டியில் 2015ம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியானது நேற்று வெள்ளிகிழமை (13.03.2015) எம்.எம்.எம். நாவாஸ் ஆசிரியரின் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

உயர்தர வகுப்பு பிரிவுகளான கலை, தொழில்நுட்ட மாணவர்களுக்கிடையே இடம் பெற்ற அணிக்கு 10 ஓவர்களை கொண்ட இவ்விறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தொழில்நுட்ப பிரிவானது பத்து ஓவர்கள் நிறைவில் 98 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலைப்பிரிவானது மூன்று ஓவர்கள் நிறைவில் 24 ஓட்டகளை பெற்றிருந்த நிலையில் காலநிலை இடம்கொடுக்காத துர்பாக்கிய நிலை காரணமாக தேசிய ரீதியாக கிறிக்கட் நடுவராக கடமையாற்றும் கல்லூரியின் பழைய மாணவன் ஹம்மாத்தினால் போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 2015ம் ஆண்டுக்கான ECGO கிண்ணமானது இரட்டை சாம்பியன் கிண்ணமாக அறிவிக்கப்பட்டு கலை,தொழில்நுட்ட அணிகள் இரண்டுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ்விறுத்திப்போட்டிக்கு வாழைச்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி.ஏ.எம்.பி.திப்புட்டுமுனவ பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன், கல்லூரியின் பழைய மாணவனும் வளர்ந்து வரும் இளம் சமூக சிந்தனையாளரும், மாஞ்சோலை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியுமான வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா, கல்லூரியின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட், கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.சீ.எச்.முஹம்மட், வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கல்லூரியின் பழைய மாணவனும் இறுதிவருட வைத்தியபீட மாணவனுமான எம்.ஐ.எம்.இல்ஹாம், பீகாஸ் கெம்பசின் பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.எம்.சபீல், பிரதேசத்தின் முக்கிய வர்த்தகர் அல்-ஹாஜ் எம்.ஏ.சி.நியாஸ் ஆகியோர்கள் சிறப்பு அதீதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கிவைத்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -