பாறுக் சிகான்-
வட மாகாண மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முஸ்லீம் மக்கள் தொடர்பில் எவரும் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை வட மாகாண மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வட மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்.உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்,அரசாங்க அதிகாரிகள் என பல மட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தத்தமது மாவட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அபிவிருத்திகள்,குறைகளை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இக்கூட்டத்தில் வட மாகாண முஸ்லீம்கள் சார்பாக எவரும் கதைக்கவில்லை.கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட வன்னி அமைச்சர் ரிசாட் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் ஆகியோர் சமூகமளிக்க வில்லை.
எனினும் வட மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன்.அஸ்மீன் அய்யூப்,ஜனூபர் ஆகியோர் வந்திருந்தனர்.
தற்போது யாழ் மாவட்ட முஸ்லீம் மக்கள் தங்களது வீட்டுப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் புதிய ஜனாதிபதியின் இவ்விஜயத்தை முஸ்லீம் அரசியல் வாதிகள் பயன்படுத்தாமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)