மத்திய மாகாண சபையின் தவிசாளர் மஹிந்த ஆபேகோனுக்கு இரண்டரை வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2001 டிசம்பர் மாதம் 5ம் திகதி பொது தேர்தலில் கலஹ தோட்ட அதிகாரி அலுவலக தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் வாக்கு மோசடி செய்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்றைய வழக்கு விசாரணையில் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மஹிந்த அபேகோன் பஹதஹேவாஹெட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக செயற்படுகிறார்.
14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 11 பேர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.