நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். திரிஷா, அனுஷ்கா ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். வீரம் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் இவர் இணையும் இரண்டாவது படம் இது.
இதற்கிடையில், அஜித்-ஷாலினி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. தற்போது, குழந்தையையும், ஷாலினியையும் அன்போடு கவனித்து வரும் அஜித்துக்கு கடந்த சில நாட்களாகவே சைனஸ் பிரச்சினை இருந்து வந்தது.
இதற்காக மருத்துவரை அணுகிய அஜித்தின் மூக்கில் சதை வளர்வதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் அவரிடம் கூறினர். இதையடுத்து சைனஸ் பிரச்சினைக்கான அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார் அஜித்.
இவரது மூக்கில் வளர்ந்துள்ள சதையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். இந்த சிகிச்சையை இஎன்டி மருத்துவரான எம்.கே.ராஜசேகர் மேற் கொண்டார். சிகிச்சைக்கு பிறகு அஜித் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
கோடம்பாக்கம்
கோடம்பாக்கம்
