பைஷல் இஸ்மாயில்-
இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறிவகைகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக ஏ9 பாதை வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியின் அருகே நின்ற மரம் ஒன்றுடன் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளானது.
பளை பிரதேசதில் மருதங்கேணி புதுக்காடு என்ற இரண்டு கிராமத்திற்க்கும் மத்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச்சம்பவத்தில் லொறியில் பயனித்த இருவர் பலியானார்கள்.
லொறியின் உரிமையாளர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வேலையில் உயிரிழந்தார். மற்றுமொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தானர், லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.