ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதன் போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரே கூட்டமைப்புக்கும் தலைவராக இருக்க மத்திய செயற் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
மேலும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அப்பதவி பசில் ராஜபக்ஷ வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
