ஏறாவூர ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில மயிர்க்கூச்செறியும் விதத்தில் வாகன விபத்தொன்று இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் ரக வண்டியொன்று வீதியோரமிருந்த பாரிய மின்சாரக் கம்பமொன்றை துண்டம் துண்டமாக முறித்துள்ளது.
இவ்வாகனம் அதிக வேகமாக செலுத்தப்பட்டதனால் சாரதியின் கட்டுப்பாட்டினை மீறி இவ்விபத்து இடம் பெற்றிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கெப் வண்டி பாரியளவில் சேதமடைந்துள்ள போதிலும் இதைச் செலுத்திச் சென்ற சாரதி சிறிய காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)