முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் யோசித்தவிற்கு, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் கிடைத்தது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த இடமாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.யோசித்த விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
யோசித்தவிற்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது என்பதனை அறிவிக்காத போதிலும், யோசித்த மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
