வாழைச்சேனை கடதாசி ஆலை விவகாரம் பிரதியமைச்சர் அமீர் அலி விளக்கம்!

த.நவோஜ்-

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையாற்றும் ஊழியர்களின் சம்பள நிலுவை மற்றும் ஆலையில் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள மின்சாரக் கட்டணம் என்பவற்றை செலுத்துவதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ரிசாட் பதியுதீன் அமைச்சரவையில் அதற்கான பத்திரத்தை சமர்பித்ததற்காக அந்த மாவட்டத்தின் அரசியல் பிரதி நிதி என்ற வகையில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற கடதாசி ஆலையில் மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த ஊழியர்களது சம்பள நிலுவை மற்றும் மின் கட்டணம் செலுத்தப்படாமல் ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் றிசாட் பதியுதீனின் கவனத்து கொண்டு வந்ததையடுத்து நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காகவும், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவும் அமைச்சரவைப் பத்திரத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களது சம்பள நிலுவையை பெற்றுக் கொடுப்பதற்கும், இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரதிநிதி என்ற வகையில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களது வழிகாட்டலில் அமைச்சர் றிசாட் பதியுதீனோடு இணைந்து ஒரு முன்னேற்றகரமான கடதாசி ஆலையாக கொண்டு செல்வதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் நிரந்தரமாக கடமையாற்றும் 142 ஊழியர்களுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக 18 மில்லியன் ரூபாய் உள்ளதுடன், தற்காலிகமாக கடமையாற்றும் 62 ஊழியர்களுக்கு ஏழு மாத சம்பள நிலுவையாக 05 மில்லியன் ரூபாய் உள்ளது.

கடந்த 2011ம் அண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கை மின்சார சபைக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் மூன்று கோடியே 98 இலட்சம் ரூபாய் நிலுவையாக செலுத்த வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -