கிராம அபிவிருத்தி நடவடிக்கை சம்மந்தமாக SLMC உயர்பீட உறுப்பினர் மாஹிர் பொதுமக்கள் சந்திப்பு




எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள ஜெஸீரா மகளிர் சங்கம் மற்றும் முபாறக் முதியோர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் சங்க அங்கத்தவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் சுயதொழில் முயற்சி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு கடந்த காலத்தில் இழந்த பாராளுமன்ற பிரநித்துவத்தினை பெற்றுத்தர முன்வரவேன்டும் என ஜெஸீரா மகளிர் சங்கம் மற்றும் முபாறக் முதியோர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் சங்க அங்கத்தவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான எம்.ரி.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.யுனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி உட்பட அமைப்பின் பிரதிநிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -