வெளிவிட்ட ஜன்னதுல் அஹதிய்யா பாடசாலையின் முதலாவது வருட பூர்த்தி விழா நேற்று (2015.02.21) வெளிவிட்ட ஜரீனா முஸ்தபா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
கலைவாதி கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு அஹதியா சம்மேளனத்தின் தலைவர் திரு. சருக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் வெளிவிட்ட அந்நூர் ஜமுஆ பள்ளிவாசளின் தலைவர் நைநார் முஹம்மத், மற்றும் வெளிவிட்ட ஜன்னதுல் அஹதிய்யா பாடசாலையின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
படமும் தகவலும்: ஷபீக் ஹுஸைன், மாவனல்லை
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)