அஹமட் இர்ஸாட்-
சமூக வலைத்தளங்களில் இன்று மிக முக்கியமாக கருதப்படும் முகநூலில் உள்ள நம்பிக்கைக்கும் நட்புக்கும் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எனது நண்பர்கள் பதுதியில் இருக்கும் சிலரின் நண்பர்கள் ஆபாச படங்களை SHARE/TAG பன்னுவதனாது ஒரு முறையற்றதும் கண்டிக்கக் கூடியதுமான செயலாகும்.
சாதாரணமாக முகநூலில் சிறுவர்கள் முதல் பெண்பிளைகள், மாணவர்கள், படித்த்வர்கள், சமூகவியலாளர்கள், குடும்பங்கள், பிள்ளைகள், நண்பர்கள், என முழு சமூக வட்டமுமே எந் நேரமும் பார்வையிடக் கூடிய சமூக ஊடகமாகும்.
ஆகவே தனிப்பட்ட அல்லது அரசியல் கோபதபங்களுக்காக இவ்வாறன செயல்களில் ஈடுபட்டு எனது முகநூல் முன்பக்கத்திலும் இவ்வாறன ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தும் SHARE/TAG செய்வதுமாக எனது நண்பர்கள் பகுதியில் இருக்கும் நண்பர்களின் நண்பர்கள் தொடர்ந் தேர்ச்சியான அவர்களுடைய திருவிளையாடல்களையும், திறமைகளையும் பறைசாற்றும் முகமாக முன்னெடுத்து வருகின்றனர்.
நான் தயவாகவும் அன்பாகவும் இவ்வாறான நண்பர்களிடத்திலும் சகோதர உள்ளங்களிடத்திலும் வேண்டிக்கொள்ளவதாவது. இவ்வாறான இழிவான செயல்களினால் எமது சமுகமும் எதிர்கால இளம் சமூதாயமும் வழிகேட்டில் செல்வதற்கு நீங்கள் ஒரு காரணமாக அமைவதுடன், இவ்வறான செயல்கள் மூலமாக யாரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ பழிவாங்கும் என்னமானது மிக கோழைத்தனமான செயல் என்பதனை குறிப்பிட்டவர்களுக்குச் சொல்லிக்கொள்வதோடு.
இவ்வாறான செயல்களில் இருந்து தயவு செய்து சமூகத்தின் நலன் கருதியும் தாங்களும் சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர்கள் என்பதனை கருத்தில் கொண்டும் தங்களுடைய குடும்பமும் சமூகத்தில் தலை நிமிர்ந்து ஒழுக்கமுள்ள குடும்பமாக வாழவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும் இவ்வாறான இழிவான செயல்களை செய்வதனை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்.
.jpg)