கிழக்கு மாகாண சபை சகல உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி (permit) வழங்க முதலமைச்சர் நடவடிக்கை

கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் வாகனத்துக்கான அனுமதி ( Permit Vehicle ) வழங்க அவசர நடவடிக்கையை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் இன்றுமேற்கொண்டார்.

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் அல்-ஹபிழ் நசீர் அஹமட் மூவின மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க நான் என்றும் உறுதியுடன் இருக்கிறேன் என்று தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முதலாவது படியாக இன்று மாகாண சபையில் இருக்கும் சகல உறுப்பினர்களுக்கும் கட்சி வேறுபாடு, எதிர்கட்சி, ஆளும் கட்சி என்றில்லாது சகலருக்கும் வாகன அனுமதி ”பேமிட்” வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று அதற்கான நடவடிக்கை இடம்பெற்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முதலமைச்சரின் நெருங்கிய சினேகிதருமான ஏ.எல்.எம்.நஸீர் இம்போட்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -