கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீனின் "வாழ்வின் ஒளி" வாழ்வாதார உதவிகள் வழங்கும் இரட்டை நிகழ்வுகள் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது. அவற்றுள் இன்று (21) மாகாண சபை உறுப்பினர் அவர்களின் கல்முனைக் காரியாலயத்தில் பி.ப 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளதோடு, நாளை நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பி.ப 4.30 மணியளவிலும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி கலந்து கொள்ளவுள்ளார்.
