அபூ மனீஹா எஸ்.எச்.ஏ.முபித்-
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் - பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று, இன்று சனிக்கிழமை காலை (21 ஆம் திகதி) 8.00 மணி முதல் - மாலை 4.00 மணி வரை, அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றது. இந் நடமாடும் சேவை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையில் ஆரம்பமானது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை அனுசரனை வழங்குகிறது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்
மற்றும் அக்கரைப்பற்று பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி. ஹேமானந்த, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், அதிபர்களான எ.இத்ரீஸ், எம்.ஐ.எம்.றியாஸ் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
குறிப்பாக - ஆள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்படி நடமாடும் சேவையின் போது வழங்கப்படுகிறது.
இதேவேளை, பொதுமக்கள் - சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள பிரச்சினைகளுக்கும் - இதன்போது தீர்வு காணப்படுகின்றன.
மேலும் - பற் சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவம் போன்றவையும் இங்கு வழங்கப்படுவதோடு, பொதுமக்களுக்கான பொதுச் சுகாதார பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆலோசனைகளும், இந்த நடமாடும் சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஏராளமான பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையினூடாகப் பயன்பெற்று வருகின்றனர்.
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)