இர்ஸாத் ஜமால் (எம்.ஏ)-
சிரியா, இராக் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிப்புச்செய்து இஸ்லாமிய தேசம் எனும் பெயரில் மக்களை கொடூரமாக கொலைசெய்து வரும் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ISIS எதிரான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டை சேர்ந்த போர்விமானி அப்துல்லா அல் கஸாஸ்பாவை சிறைபிடித்த ISIS இறும்பு கூட்டில் வைத்து உயுரோடு எரித்து கொலை செய்த வீடியோ காட்சியினை இணைய தளங்களில் பதிவேற்றியுள்9ளனர்.
அப்பதுல்லா அல் கஸாப்ஸாவின் படுகொலை தொடர்பாக ஊடகங்களுக்கு தருத்து தெரிவித்த அன்நாட்டு மன்னர் அப்துல்லா “எமது விமானியை ஈவிரக்கமின்றி எரித்துக் கொலை செய்தவர்கள் கோழைகள். இஸ்லாத்தின் பெயரால்அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவர்கள் வாதிகளே தவிர இஸ்லாமி போராலிகள் அல்லர். இவர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் எனது மக்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
அமேரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினை இன்று (04) வெள்ளை மாளிகையில் சந்தித்து மன்னர் அப்துல்லா விமானியின் படுகொலை பற்றி அவரிடம் தெரிவித்ததோடு ISIS வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடிதாகவும் வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
