வடக்கு, கிழக்கு மக்களின் மனதில் இன்னமும் சந்தேகங்கள் நிலவுகின்றன- சுதந்திர நிகழ்வில் ஜனாதிபதி- படங்கள்

நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மனத்தில் இன்னமும் சந்தேகங்கள் நிலவுகின்றன. எனவே வடக்கு தெற்கு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் 67 ஆவது சுதந்­திர தினம் வைபவம் ' அற்­பு­த­மான நாடு - ஒளி­ம­ய­மான நாளை ' என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் இலங்­கையின் நிரு­வாக தலைநக­ர­மான ஸ்ரீ ஜய­வர்­த­ன­பு­ரவில் அமைந்துள்ள பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் மிக எளி­மை­யாக நடைபெற்றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முப்­ப­டைகள் மற்றும் பொலி­ஸாரின் விஷேட அணி­வ­குப்பு மரி­யா­தையும் நடனக் கலை­ஞர்­களின் விஷேட கலா­சர நிகழ்­வு­களும் இடம்­பெ­ற­;றன. எனினும் இம்­முறை வீண் செல­வுகள் தவிர்க்­கப்­பட்டு சுதந்­திர தின வைபவம் மிக எளி­மை­யாக கொண்­டா­டப்­பட்டன. அதன்­படி இம்­முறை வான் சாக­சங்கள்இ கடல்­மார்க்­க­மான சாக­சங்கள் தவிர்க்­கப்­பட்­டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, 

காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாடு இன்றைய தினமே விடுதலை பெற்றது. இந்த தினத்தை வரலாற்று முக்கியத்துவமிக்க இடமான ஸ்ரீ ஜய­வர்­த­ன­பு­ரவில் கொண்டாட கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 

சோல்பரி யாப்பு காலத்தில் இருந்த பல அரசத்த தலைவர்களின் முயற்சியினால் 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. மேலும் 1972 ஆம் ஆண்டு எமது நாடு குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் நாட்டில் 30 வருடகாலமாக காணப்பட்ட பயங்கரவாதத்தை 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்த போதும் வடக்கும் மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் இதயங்களை வெல்லவில்லை. அவர்களின் மனத்தில் இன்னமும் சந்தேகங்கள் நிலவுகின்றன. எனவே வடக்கு மற்றும் தெற்கு மக்களை இணைக்கும் வகையில் தேசிய நல்லிணக்க நடடிக்கையில் செயற்பட வேண்டியுள்ளது. 

பயங்கரவாத யுத்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் தலைமையின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யுத்த காலத்தில் ஆயிரம் கணக்கான இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். பலர் கால் கைகளை இழந்து ஊனமாகியுள்ளனர். இன்றைய நாளில் இராணுவத்தினரை கௌரவிப்பது எமது கடமையாகும்.

புதியதோர் ஆட்சியை நிறுவ மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு வருமான பிரச்சினை முக்கியமாக காணப்பட்டது. இதனால் சந்தோசமிழந்து காணப்பட்டனர். எனினும் நாம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளில் சிலவற்றை இந்த மூன்று கிழமைகளில் நிறைவேற்றியுள்ளோம். ஓர் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான அடித்தளமே இதுவாகும்.

மேலும் நாட்டில் புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதோடு தேசிய பொருளாதாரத்தையும் முன்னேற்ற வேண்டும். இதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமாகும். கடந்த காலங்களில் காணப்பட்ட பழிவாங்கல், காட்டிகொடுப்பு என்பவற்றை இல்லாதொழிக்க வேண்டும். ஒருவர் மற்றையவரின் துன்பத்தை அறிந்து உதவும் மனிதபிமானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். எமது குறைகளை தாமே கண்டறிந்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

இதேவேளை நாட்டின் அரச சேவையை சக்திப்படுத்த வேண்டும் என்பதோடு நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்படும் சில குறைப்பாடுகளையும் நீக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்த்துகொள்வதோடு சர்வதேச நாடுகளுடன் நட்புறவை பேணி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல வேண்டும். மேலும் எமது நாட்டை மூன்றாம் தரப்பினருக்கு விடுகொடுக்காமல் நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -