மோசடிகளில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு முவர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் ஹலீம்

இக்பால் அலி-

புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் மற்றும் உம்ராவுக்குச் செல்வோர்கள் கடந்த காலங்களாக பலத்த அசௌகரியங்களையும் துன்பங்களையும் எதிர் நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுவதுடன் இவ்வாரத்தில் மூன்று தினங்களுக்கு முன் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புகார் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்ற வருகின்ற வெளிநாட்டு முவர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹலீம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

இலங்கையிலிருந்து இஸ்லாமிய புனித மார்க்கக் கடமையான ஹஜ் மற்றும் உம்ராவுக்குச் செல்லுபவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரிவரச் செய்து விட்டு நாடு திரும்பும் வரை சம்பந்தப்பட்ட முகவர்கள் அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து கடைசி வரைக்கும் பொறுப்புதாரியாக செயற்படுதல் அவசியமாகும். 

வெறுமனே பணம் சம்பாதிப்பதற்காக மோசடிகளில் ஈடுபட்டு வரும் முகவர்களுடைய அனுமதிப் பத்திரங்கள் பரிசீலனை செய்து இரத்துச் செய்வதற்கான ஒழுங்கள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்பட்ட அறுவர் கொண்ட பெண்கள் ஜித்த விமான நிலையத்தில் பொறுப்பேற்க கூட முகவர் நிலையத்தில் ஆட்கள் இல்லாமல் நிர்க்கதியாhன நிலைக்கு உட்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுஇது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் தலதாக அத்துக்கொரலவிடம் கலந்தாலோசித்து இவ்வாறன மோசடிகளில் ஈடுபட்டு வரும் முகவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -