ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தின் போது ஒரு குழுவினர் தமக்கு எதிராக ஊ சத்தம் இட்டதாக ஹிருணிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர்களே இருக்கின்றார்கள் என மேல் மகாணசபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு எதிராக செயற்பட்டவர்களே அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது தமக்கு எதிராக ஊ சத்தம் இட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் புதிதாக அதிகாரிகளை நியமித்துள்ள போதிலும் ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரிகளாக இருப்பவர்களில் அநேகர் முன்னாள் ஜனாதிபதிக்கு கடைசி நேரம் வரையில் ஆதரவளித்து வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் போன்றவர்களை அருகில் வைத்துக்கொள்வது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய விமான நிலையங்களை மூடுவதாக முன்னர் அறிவித்த போதிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐந்து, ஆறு பேர் தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
