ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
அகில இலங்கை தமிழ் மொழித்தின பரிசளிப்பு விழா பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை(21) கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் கலந்து சிறப்பித்தார்.
பேராசிரியர் சபா ஜெயராசா, கல்வியமைச்சின் தேசிய மொழிகள் ம்றம் மானுடவியல் பிரிவு கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க, தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கிறேஸ் சடகோபன், தமிழ் மொழி பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திவாகர், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் விக்கிரமசிங்க உட்பட பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவால் வடாந்தம் வெளியிடப்படும் சஞ்சிகை கூர்மதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்;றிதழ் மற்றும் பதக்கங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் மற்றும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)