அட்டாளைச்சேனை பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் சேவை..

பைஷஸ் இஸ்மாயில் -

ட்டாளைச்சேனை பொதுமக்களின் நலன் கருதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நாளை அட்டாளைச்சேனை அந் நூர் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த நடமாடும் சேவை நாளை காலை 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணிவரை இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் தொலைந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு, உணவு முத்திரை என்பனவற்றிற்கு உடனுக்குடன் முறைப்பாடு பதியப்பட்டு பிரதிகள் வழங்கி ஆவனங்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்திய உதவிகள், இரத்த பரிசோதனைகள், பற்சிகிச்சை இலவச சேவைகளும் நடைபெறவுள்ளன. மேலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் அல்லது தொலைந்தவர்களுக்குமாக மானிய அடிப்படையில் தேசிய அடையாள அட்டைக்குரிய புகைப்படம் உடனுக்குடன் வழங்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சட்ட ஆலோசனைகள், சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பான கருத்தரங்குகள் நடைபெறும் இதேவேளை முறைபாடுகளும் உடனுக்குடன் பதியப்பட்டு உடன் விசாரணைகளை நடாத்த விஷேட குழுவினரால் ஏற்பாடுகளும் செய்யப்பட்டடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -