அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.எம்.பளீல் முதலமைச்சரின் இணைப்புசெயலாளரானார்

அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.எம்.பளீல்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமடின் அம்பாரை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக  ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தேசியத்தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான  றஊப் ஹக்கீமின் சிபார்சுக்கிணங்க முதலமைச்சரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதம் சமீபத்தில் முதலமைச்சர் காரியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டபோது கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அசீசும் கலந்து கொண்டார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதலாவது பல்கலைக்கழக பட்டதாரியான  பளீல் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்பினறும் கல்வி மனித உரிமைகளுக்கான பணிப்பாளரும், முன்னாள் ஜாமிஆ நழீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளரும் வங்கி முகாமையாளரும்,தெ.கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளராகவும்,'சிரான் சமாதானச்செயலகப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -