கிழக்கு முழுவதும் அமோக வரவேற்புடன் சுதந்திர தின நிகழ்வு: ஒரே பார்வையில்- படங்கள் இணைப்பு


சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் சுப்பர் ஓக்கிட் பிரிமியர் லீக் 2015 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு
 பி. முஹாஜிரீன்

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் சுப்பர் ஓக்கிட் பிரிமியர் லீக் 2015 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று (04) நடைபெற்றன.

வருடாந்தம் சுப்பர் ஓக்கிட் கழக வீரர்களின் திறனை விருத்தி செய்வதற்காக நடத்தப்படும் இத்தொடருக்கமைய, சுப்பர் ஓக்கிட் டைகரஸ்;, லயன்ஸ், ஈகிளஸ்;, வொரியர்ஸ் ஆகிய 4 அணிகளுக்கிடையிலான இச்சுற்றுத் தொடரில் சுப்பர் ஓக்கிட் டைகரஸ்;, சுப்பர் ஓக்கிட் லயன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

இவ் இறுதிநாள் நிகழ்வு சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் சுப்பர் ஓக்கிட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூதீன் பிரதம அதிதிதயாகக் கலந்த கொண்டதுடன், இந்நிகழ்வில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் எஸ்.எச். தம்ஜீத், முகாமையாளர் எஸ்.எச். முர்ஸித், கிரிக்கட் அணித்தலைவர் எம்.எச். நிஸார்தீன் உட்பட நிருவாகிகள் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணி வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டன. இதில் போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் ஓக்கிட் டைகரஸ் அணித் தலைவர் எஸ்.எம். பர்ஹான் தெரிவானார். இதில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணி வீரர்களுக்கும் இரண்டாவதாக தெரிவான அணி வீரர்களுக்கும் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.









மருதமுனை கோல்ட் மையின்ட் விளையாட்டுக்கழகம் 'எலைஸ்'வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது

பி.எம்.எம்.ஏ.காதர்-

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி அம்பாரை மாவட்ட கால்பந்தாட்டச் சம்மேளனம் ஏற்பாடு செய்த 'எலைஸ்'வெற்றிக்கிண்ணத்திற்கான தண்டனை உதைமூலமான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று காலை (04-02-2015)மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத்தொகுதியில் நடைபெற்று.
அம்பாரை மாவட்ட கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரும், கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவரும்,மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவருமான எம்.எல்.எம்.ஜமால்தீன்,பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல்; மனாப், உபசெயலாளர் ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்) பொருளாளர் எஸ்.எம்.கான், சுற்றுப் போட்டிக் குழுவின் தலைவர் யூ.எல்.றமீஸ் ஆகியோருடன் ஆசிரியர்களான யூ.எஸ்.சமீம்,ஏ.எம்.றியாஸ் உள்ளீட்ட கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இச்சுற்றப் போட்டியில் 27 அணிகள் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியும்,பரிசளிப்பும் இன்று மாலை சம்மேளனத்தின் தலைவரும், கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கல்முனை உதவிப்பொலீஸ் அதியட்சகர் காமினி தென்னக்கோன் கலந்து கொண்டார்.
இறுதிப்போட்டியில் மருதமுனை கோல்ட் மையின்ட் விளையாட்டுக்கழகமும். கல்முனை பிரிலியன் விளையாட்டுக்கழகமும் பங்குபற்றி நான்கிற்கு மூன்று(4-3) என்ற கோல் அடிப்படையில் மருதமுனை கோல்ட் மையின்ட் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று 'எலைஸ்'கிண்ணத்தையும், ரூபா 7500.00 பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டது. 2ம் இடத்தை கல்முனை பிரிலியன் விளையாட்டுக்கழகம் பெற்று 'எலைஸ்'கிண்ணத்தையும்;,ரூபா 5000 பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.
இச்சுற்றுப்போட்டியில் சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவரும், மத்தியஸ்தர் சங்கத்தின் தவிசாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன் தலைமையில் மத்தியஸ்த்தர்களான ஏம.;பி.ஏ.றசீட்,எம்.எல்.ஏ.தாஹீர் சீ.எம்.அஸ்ஹர்,எஸ்.எம்.உபைதீன்,எம்.எம்.றியாஸ்.ஜே.பாதுசா,யூ.எஸ்.சமீம் ஆகியோர் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினார்கள்.
எலைஸ் கப்பை கோல்ட்மைன்ட் கைப்பற்றியது.
எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்
இலங்கையின் 67வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த பினால்டி முறையிலான சுற்றுப்போட்டி, மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இடம்பெற்றது.
18 கழகங்களில் இருந்து 27 அணிகள் பங்கு கொண்ட குறித்த பினால்டி முறையிலான இறுதியாக இடம்பெற்ற போட்டியில் விர்லியட்டை (பச்சை) விளையாட்டு அணியைக்கும்  கோல்ட்மைன்ட்(சிவப்பு) அணிக்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்று  கோல்ட்மைன்ட்(சிவப்பு) அணி எலைஸ் கப்பை கைப்பற்றியது.
இடம்பெற்ற பினால்டி முறையிலான இச்சுற்றுப் போட்டிக்கு குழுத்தலைவராக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் இச்சுற்றுப் போட்டி குழு தவிசாளர் யூ.எல்.எம்.ரமீஸ் செயற்பட்ட அதேவேளை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கேடயம்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வுக்கான நெறிப்படுத்தலை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.அப்துல் மனாப் மேட்கொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.




பாலமுனை முபீத்,அபூ மனீஹா

இலங்கை திரு நாட்டின் 67வது சுதநதிரதினத்தை முன்னிட்டு பாலமுனை இஜாஸ் பவுண்டேஷன் அனுசரனையில் இடம்பெற்ற மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இட்பெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் பிரதம இதிதியாகவும் இஜாஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் இஜாஸ் சபீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினரக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 
அபூ மனீஹா,பாலமுனை.முபீத்

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் எம்.சி.ஏ.சமது கௌரவ மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, உதவி மாவட்ட சாரண ஆணையாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ், சம்சுல் மகீன் ஜெலீல் சாரணிய பயிற்றுவிப்பாளர் இஸட்.எம்.மிஸ்பான் உட்பட சாரண அசிரியர்கள் சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர். 






டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் -காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் தீவிரம்-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ,காத்தான்குடி நகர சபை,காத்தான்குடி பொலிஸ் நிலையம் ,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் என்பன இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்;.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன்,காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர், காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் றபீக் , பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மதுல்லாஹ், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.செல்வராஜா உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இதன் போது வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் டெங்கு நோயின் விபரீதங்கள் தொடர்பாகவும் வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் அல்-அஷ்ரக் கனிஷ்ட்ட பாடசாலையில்... 
 இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி  நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் கனிஷ்ட்ட பாடசாலையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம். ஹபிபுள்ளாஅவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் கிளையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு -கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால்- நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு..

பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தினால் காத்தான்குடி தள வைத்தியசாலையிலுள்ள விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 04-02-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம். சஹீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் , காத்தான்குடி குபா பள்ளிவாயல் தலைவர் கே.எல்.எம். மன்சூர், வைத்திய தாதியர்கள், கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பதில் தலைவர் எம்.எச்.எம்.அபீப் அதன் செயலாளர் எம்.எஸ்.எம்.அயாஸ் அதன் பொருளாளர் எம்.ஏ.எம்.ஆதீல் உட்பட கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் ,சமயம் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









பொத்துவில் சுதந்திர நிகழ்வு ......... 
செய்தியார் எம்.எஸ்.சம்சுல் ஹுதா
இலங்கையின் 67வது சுதந்திர தினம் இன்று நாடாளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இன்று காலை பொத்துவில் பிரதேசத்திலும் கொண்டாடப்படுகின்றது. 
பொத்துவில் பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலீஸ் நிலையம், வைத்தியசாலை, மற்றும் அறுகம்பை ஆட்டோ சங்கத்தினர் ஆட்டோ பவணி ஒன்றினையும், பொத்துவில் முன்பள்ளி பாலர் பாடசாலைகளுள் ஒன்றான ஜுனியர் கொலிஜ் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர நிகழ்வின் முக்கியத்துவம் பற்றியும் கூறினர்.





கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் இணைந்து இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வு................ 
எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்-
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் இணைந்து இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த இரத்ததான  மற்றும்  மரமநடும் நிகழ்வுகள் இன்று கல்லூரியில் அனைவரினதும்  பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனீபா , சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் இ கல்முஐன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்துல் கப்பார், கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் , கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதி பொறுப்பு உத்தியோஸ்தர் எம்.ஸி.எம்.ஸி. றிலா , பழைய மாணவர்சங்க கொழும்பு கினையின் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் ,பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா , உப செயலாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் , கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் , உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர் ,பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் , என பலரும் கலந்து கொண்டனர்.
 பெண்கள் உட்பட பெரும் தொகையானோர் இரத்ததானம் செய்வதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார்கள்.




பிஸ்மி குழுமம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளை,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்-படங்கள்.
பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 4-02-2015 இன்று புதன்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. 
இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி பிஸ்மி குழுமத்தின் ஏற்பாட்டில் புகைத்தலற்ற போதைப்பொருளற்ற,சிறுவர் துஷ்பிரயோகமற்ற சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் மகுடம் தாங்கி சிறுவர்களுக்கான சுதந்திர தின நிகழ்வு பிஸ்மி தலைமைக் காரியாலத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது இதில் தேசப்பந்றை பிரதிபலிக்கும் பல்வேறு சிறுவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு அதன் காத்தான்குடி காரியாலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான சிப்லி பாரூக் தலைமையில் இடம்பெற்றது இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே வேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் ,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்த 67 வது சுதந்திர தின நிகழ்வு நல்லாட்சியை நோக்கிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் தவிசாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்(இஸ்லாஹி),அதன் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள்,பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.தன் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.





67வது சுதந்திர தின நிகழ்வு – அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில்...
எம்.ஜே.எம். சஜீத் 
கல்விக் கல்லூரியில். 67வது சுதத்திர தினத்திலே நல்லாட்சி நிலை நாட்டப்பட்டுள்ளது. எதிர் காலத்திலே பாடசாலை சமூகத்திற்கு செல்கின்ற நீங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம் நீங்களும் நல்லாட்சியின் பங்காளிகளாக மாறமுடியும் என அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னால் பீடாதிபதி ஏ.எல்.ஏ. றசூல் தெரிவித்தார்.67வது சுதந்திர தின நிகழ்வு அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னால் பீடாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந் நிகழ்வில் கல்லூரியின் பதிவாளர் எஸ்.எம். பஸீர், கல்லூரி  விரிவுரையாளர்கள் உட்பட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.









KCDA யின் ஏற்பாட்டில் 67வது தேசிய சுதந்திர தின விழா

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட இலங்கை தாய்த் திருநாட்டின் 67வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வு 2015.02.04ஆந் திகதி புதன்கிழமை மட்ஃமமஃமீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் KCDA  யின் ஆலோசகரான ஜனாப். ஐ.எம். றிஸ்வின் அவர்களின் தலைமையில் காலை 07.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வு சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மதங்களை பிரதிபளிக்கும் மதகுருமார்களின் பங்குபற்றுதலுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி எம்.எம்.எஸ். அமீர் அலி மற்றும் கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளரும், KCDA யின் ஆலோசகருமான கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் ஏனைய அதிதிகளாக பிரதி தவிசாளர் கௌரவ ஏ.எம். நௌபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.எம்.எம். ருவைத், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதி அதிபரும், முஊனுயு யின் தலைவருமான ஜனாப். ஏ.எம். அன்வர், உபதலைவர் ஜனாப். ஏ.எம்.எம். முர்ஸிதீன், செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
பிரதம அதிதி அவர்களால் தேசிய கொடியினை ஏற்றி இவ்விழா ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மதகுருமார்களினால் ஆசியுரையும் வழங்கப்பட்டது.










பி. முஹாஜிரீன்
இலங்கையின் 67வது சதந்திர தினத்தை முன்னிட்டு அரச, மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் பிரதான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (04) காலை இடம்பெற்றன.

இது தொடர்பான பிரதான வைபவம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் மேலதிக அரச அதிபர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கார மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் விசேட மத வழிபாடுகளும் சமய ஆராதனைகளும் இடம்பெற்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதடன், இங்கு விசேட இரத்த தான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த சுதந்திரதின உரையும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் முன்னணிகளின் மாவட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் நற்பிட்டிமுனை அல் அக்சா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாலமுனை அல் ஈமாணிய்யா அரபக்கல்லூரி அதிபர் ஆசிரியாகள் மற்றும் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த துஆப் பிராத்தனையுடனான சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் அல்ஹாபிழ் மௌலவி சாஜித் ஹூஸையின் தலைமையில் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலிலும், சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய வளாகத்திலும், பாலமுனை அல்அறபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு பாலமுனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் றஉப் பள்ளிவாசல் வளாகத்திலும,; பாலமுனை இஜாஸ் பவுண்டேசன் அமைப்பு ஊரிலுள்ள கழகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சினேகபூர்வ கடின மற்றும் மென்பந்து கிரிக்கெட்சுற்றுப் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூகசேவை அமைப்புக்களின் தலைவர்கள் பொலிசார், படை அதிகாரிகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




 


மட்டு-காத்தான்குடி பிரதேசத்தில் இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்-படங்கள்.
பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04-02-2015 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. 
இதன் முதல் நிகழ்வு காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல் மனார் அர்றாஸித் மண்டபத்தில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த சுதந்திரன வைபவம் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப முன்றலிலும் ,ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் இடம்பெற்றது.
     இதன் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி         ஏற்றப்பட்டு அதற்கான மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேற்படி காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த சுதந்திரன வைபவத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன் காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அதன் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -