சலீம் றமீஸ்-நிஷ்மி, அக்கரைப்பற்று.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் (பனையறுப்பான் சந்தி)மீள் குடியேற்ற கிராமத்திற்கான நீண்ட நாள் தேவைகளில் ஒன்றான மின் இணைப்பு வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக முன்னாள் மாகாண அமைச்சர் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் ஷக்கி, மற்றும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.உமர்லெவ்வை ஹாஜ் அவர்களும் அதிதிகளாக அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்,முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்உவைஸ், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.சாலிமு, செயலாளர் எம்.பி.அப்துல் ஹமீத் மற்றும் அக்கரைப்பற்று மா நகர சபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகள் கிராம மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஏ.உமர்லெவ்வை முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுடன் இணைந்து நாடாவை வெட்டி மின் இணைப்பை ஆரம்பித்து வைத்தபின் பள்ளிவாயலுக்கான மின் இணைப்பையும் ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கபட்ட இக்கிராமம் பயங்கரவாதாத்தினால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம் பெயர்ந்து பின்னர் மீள் குடியேறிய போதிலும் மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை காரணமாகவும், காட்டு யானைகளின் தொல்லை காரணமாகவும் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
அக்கரைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் அவர்கள் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடதத்தக்கது.
இந்தக் கிராமத்தை உருவாக்கி அதன் அபிவிருத்திக்காக கடந்த 40 வருடங்களாக அர்ப்பணிப்புடனான சேவையை வழங்கி வரும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஏ.உமறு லெவ்வை அவர்களை முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் முன்னாள் மாகாண அமைச்சர் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அர்களும் பொன்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவித்தனர். இறுதியாக துஆப் பிரார்த்தனைனயும்இடம் பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)